11-ஆம் நூற்றாண்டில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவரும், வைஷ்ணவ குருமாருமான ராமானுஜரின் 216 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5-ஆம் தேதியன்று திறந்து வைக்கிறது. இந்த சிலை ஹைதராபாத் நகரில் அமைந்துள்ளது. ஷம்ஷாபாத் பகுதியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் இந்த சிலை அமைந்துள்ளது. சமத்துவத்துக்கான சிலை (Statue of Equality) என இந்த சிலை போற்றப்படுகிறது.
இதனை நிர்வாக குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் என ஐந்து விதமான உலோகங்களை பயன்படுத்தி இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர் ராமானுஜர்.
இந்த சிலையை நிறுவுவதற்கான அடிக்கல் கடந்த 2014-இல் நாட்டப்பட்டது. மெல்கோட் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் உள்ள ராமானுஜரின் செதுக்கப்பட்ட கல் உருவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.