இந்தியா

2.4 டிகிரி செல்சியஸ்: கடும் குளிரில் உறையும் டெல்லி!

2.4 டிகிரி செல்சியஸ்: கடும் குளிரில் உறையும் டெல்லி!

webteam

டெல்லியில் கடும் குளிர் பதிவாகியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர் நிலவும். அதன்படி தற்போது குளிர்காலம் என்றாலும் இந்த ஆண்டு வழக்கத்தை விடவும் குளிர் அதிகமாக காணப்படுவதாக கூறப்படுகிறது. வரலாறு காணாத குளிரால் டெல்லி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக 4 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான குளிர் நிலவி வந்த நிலையில் இன்று காலை 6.10 மணி நிலவரப்படி 2.4 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை நிலவியது.

பனிப்பொழிவால் டெல்லியில் நாள் முழுவதும் சூரியனையே பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. குறைந்த வெளிச்சம் காரணமாக சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள பொருட்களைக் கூட காணமுடிவதில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ரயில் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடும் குளிர், வரும் நான்கு நாட்களுக்கு மேல் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.