இந்தியா

'தெலங்கானா இந்தியாவின் ஆப்கானிஸ்தான்; கே.சி.ஆர். தான் தாலிபன்' -ஷர்மிளா பேச்சால் சர்ச்சை

'தெலங்கானா இந்தியாவின் ஆப்கானிஸ்தான்; கே.சி.ஆர். தான் தாலிபன்' -ஷர்மிளா பேச்சால் சர்ச்சை

JustinDurai

தெலங்கானாவை இந்தியாவின் ஆப்கானிஸ்தான் என்றும், அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவை தாலிபன் என்றும் பேசியிருக்கிறார் ஷர்மிளா.

ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியை நடத்தி வருகிறார். தெலங்கானாவில் ஆளுங்கட்சியான பாரத ராஷ்டிர சமிதிக்கு எதிராகத் தீவிர அரசியலை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், தெலங்கானாவில் மெஹபூபாபாத் நகரில் ஷர்மிளா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''சந்திரசேகர ராவ் சர்வாதிகாரி, கொடுங்கோலனாக உள்ளார். இங்கு இந்திய அரசியல் சாசனம் அமலில் இல்லை. சந்திரசேகர ராவின் சாசனம் தான் உள்ளது. இந்தியாவின் ஆப்கானிஸ்தானாக தெலங்கானா உள்ளது. அதன் தலிபானாக சந்திரசேகர ராவ் உள்ளார்'' என காட்டமாகத்  தெரிவித்தார்.

இதனையடுத்து ஷர்மிளா மீது போலீசார் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்து ஹைதராபாத்திற்கு அழைத்து சென்றனர். ஷர்மிளாவை கண்டித்து சந்திரசேகர ராவ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஷர்மிளாவின் கொடும்பாவியை எரித்ததுடன் , 'மாநிலத்தை விட்டு வெளியேறு ' என கோஷம் போட்டனர்.