டிஜிபியாக இன்று பதவியேற்கிறார் சைலேந்திரபாபு: தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏ.கே. திரிபாதி ஓய்வு பெற உள்ள நிலையில், இன்று சைலேந்திரபாபு பொறுப்பேற்கிறார்.
நீட் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்: நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றச்சாட்டியுள்ளார்.
ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கும் அனுமதி?: அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கும் விரைவில் அனுமதி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
25 மாவட்டங்களில் 100க்கு கீழ் தொற்று: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 25 மாவட்டங்களில் 100க்கும் கீழ் தொற்று பதிவாகி இருக்கிறது.
3ஆம் அலையை தடுக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாட்டில் கொரோனா 3ஆம் அலையை தடுப்பதற்கான ஏற்பாடுகளுக்கு100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
சிவசங்கர் பாபாவிடம் இன்றும் விசாரணை: சொகுசு அறையில் வைத்து சிவசங்கர் பாபாவை கேள்விகளால் காவல்துறையினர் துளைத்தெடுத்தனர். 3ஆவது நாளாக இன்றும் விசாரணை நடத்துகின்றனர் சிபிசிஐடி போலீசார்.
ரூ.200 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 200 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் 36 ஏக்கர் அரசு நிலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டது.
பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்: பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. எல்லை பாதுகாப்பு, கொரோனா தடுப்பு பணி உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் மீது மேலும் ஒரு வழக்கு: சிறார்களின் ஆபாச படங்கள் பதிவிடப்படுவதாக குற்றச்சாட்டி ட்விட்டர் நிறுவனம் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலம்பஸ் சிலை உடைப்பு: கொலம்பியாவில் நீடிக்கும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கொலம்பஸ் சிலையை எதிர்க்கட்சியினர் உடைத்தனர்.
ஜெர்மனியை வெளியேற்றியது இங்கிலாந்து: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனியை வெளியேற்றியது இங்கிலாந்து. மற்றொரு போட்டியில் கடைசி நிமிட கோலால் ஸ்வீடனை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது உக்ரைன்.