இந்தியா

கர்நாடகாவில் தமிழ் பதாகைகள் கிழிப்பு

கர்நாடகாவில் தமிழ் பதாகைகள் கிழிப்பு

webteam

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்தெறிந்தனர்.

சுதந்திர தினத்தையொட்டி நேற்று உரையாற்றிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்தியை போல் பிராந்திய மொழிகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அத்துடன் கர்நாடகாவில் மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் பெங்களூருவின் புலிகேசி நகரில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் உள்ளூர் நிர்வாகி ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழ் மொழியில் வைத்திருந்த பதாகைகளை பிரவீன் ஷெட்டி தலைமையிலான கன்னட ‌ரக்‌ஷன வேதிகே அமைப்பினர் கிழித்தெறிந்தனர். அத்துடன் அருகில் இருந்த இந்தி பதாகைக்கும் கருப்பு வண்ணம் பூசினர்.

இதனால் ஏற்பட்ட பதற்றத்தைத் ‌தொடர்ந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த அமைப்பைச் சேர்ந்த 10 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர். கன்னட மொழியில் பதாகைகள் வைக்காமல் பிற மொழியில் வைக்கப்பட்டதை எதிர்த்து இந்தப் போராட்டத்தை அவர்கள் நடத்தியதாக கூறப்படுகிறது.