இந்தியா

“கழிவறைக் கட்டுவது மானத்திற்காக” - பிரதமரிடம் சேலம் பெண் பெருமிதம்

“கழிவறைக் கட்டுவது மானத்திற்காக” - பிரதமரிடம் சேலம் பெண் பெருமிதம்

rajakannan

கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல; மானத்திற்காக என சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார். 

தூய்மை சேவைப் பணியில் நம்மை அர்ப்பணித்துக்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்து, அதற்கான ஏற்பாட்டை டெல்லியில் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதற்காக பல்வேறு மாநிலங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களின் மக்களிடம் மோடி உரையாற்றி வருகிறார். 

அந்த வகையில், தூய்மை இந்தியா திட்டம் குறித்து சேலம் மாவட்டம் தலைவாசல் மக்களுடன் வணக்கம் என்று கூறி மோடி உரையாடினார். ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் சிறப்பு குறித்து சுமதி என்ற பெண் பிரதமருக்கு தமிழில் எடுத்துரைத்தார். அப்போது பேசிய அந்தப் பெண்மணி, ‘தூய்மை இந்தியா’ திட்டம் வருவதற்கு முன் தங்களது கிராமத்தில் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை போக்கி வந்ததாகவும், தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் கழிவறைக் கட்டி பயன்படுத்துவதால் புது உற்சாகம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், சேலம் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்ற தாங்கள் பாடுபடுவோம் எனக் கூறினார். இதனையடுத்து பேசிய பிரதமர், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் தமிழகப் பெண்களின் ஆர்வத்தை பாராட்டினார்.