இந்தியா

“நான் சொன்னது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டது!” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே

“நான் சொன்னது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டது!” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே

EllusamyKarthik

சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிணை வேண்டி குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு “பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து கொள்ளத் தயாரா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அது சர்ச்சையானது. இந்நிலையில் நான் சொன்னது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டதாக தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார் நீதிபதி எஸ்.ஏ. பாப்டே.

“பெண்களை மதிப்பவன் நான். போற்றிப்பாடுபவன் நான். அந்த வழக்கு விசாரணையின்போது குற்றவாளியை திருமணம் செய்து கொள்ளுமாறு நான் சொல்லவில்லை. திருமணம் செய்து கொள்ளத் தயாரா? என்று தான் கேட்டோம். திருமணம் செய்து கொள்ள சொல்லவில்லை.

அப்படியென்றால் நாங்கள் உங்களுக்கு உதவுவோம். இல்லையென்றால் உன் பணியை இழந்து, சிறை செல்ல வேண்டியிருக்கும். நாங்கள் உங்களை நிர்பந்திக்கவில்லை. ஏனென்றால் நீதிமன்றம் உங்களை நிர்பந்தித்தது என்று சொல்லக்கூடாது என்பதற்காக இதை சொல்கிறோம். எங்களது நீதிமன்ற அமர்வு பெண்களை பெரிதும் மதிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

கடந்த மார்ச் 1 ஆம் தேதியன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிபதி எஸ். ஏ.பாப்டே இப்படி கேட்டிருந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.