இந்தியா

கோவை இரட்டை கொலை வழக்கு: தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

கோவை இரட்டை கொலை வழக்கு: தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

webteam

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதோடு, அவரது தம்பியும் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

2010 ஆம் ஆண்டு பள்ளி சென்ற சிறுமி, பணத்துக்காக கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது தம்பியும் கடத்திக் கொல்லப்பட்டார். பெரும் அதிர்ச்சியை ‌ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், போலீசாரிடம் இருந்து தப்பியோடியபோது, மோகன்ராஜ் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மனோகரன் என்பவருக்கு கோவை நீதிமன்றம், தூக்குத்தண்டனை விதித்தது. சென்னை உயர்நீதிமன்றமும் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த தண்டனையை உறுதி செய்தது. 

தூக்குத் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனோகரன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதி ரோகிண்டன் ஃபாலி நாரிமன் தலைமையிலான அமர்வு, அக்டோபர் 16 ஆம் தேதி வரை தண்டனையை நிறைவேற்ற தடை விதித்திருந்தது. மேலும் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நீதிபதிகள், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினர். மனோகரனுக்கான வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கினர்.