தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிரான மனுக்கள் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
தேசிய குடியுரிமைத் திருத்தச்சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதும் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி செயல்படுத்தப்பட உள்ளதால் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் வரும் 22ஆம் தேதி முதல் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.