இந்தியா

“ட்ரம்ப் வருகையால் இந்தியாவுக்கு எந்தப் பயனும் இருக்காது” - சுப்ரமணியன் சுவாமி

“ட்ரம்ப் வருகையால் இந்தியாவுக்கு எந்தப் பயனும் இருக்காது” - சுப்ரமணியன் சுவாமி

webteam

ட்ரம்ப் வருகையால் இந்தியாவுக்கு எந்தப் பயனும் இருக்காது என மூத்த பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை இந்தியா வருகிறார். அவரின் பயணத் திட்டத்தின்படி குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு முதலில் செல்கிறார். அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவரும் பிரதமர் மோடியும் பேசுகிறார்கள்.

ட்ரம்ப் செல்லவிருக்கும் நகரங்கள் அனைத்தும், ட்ரம்பை வரவேற்கும் விதமாக விழாக்கோலம் பூண்டுள்ளது. சாலையோரங்களில் வரவேற்பு பேனர்கள், இரு நாட்டுக் கொடிகள், சுவர் ஓவியங்கள், தற்காலிக அலங்கார வளைவுகள் எனப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ட்ரம்ப் வருகையால் இந்தியாவுக்கு எந்தப் பயனும் இருக்காது என மூத்த பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “டிரம்பின் வருகையால் இந்தியாவுக்கு எந்தப் பயனும் இருக்காது. அவர் அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்து நோக்கில்தான் இந்தியா வருகிறார்.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு சார்ந்த சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதுவும் அவரது நாட்டை உயர்த்தும் நோக்கிலேயே இருக்கும். அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்க நாம்தான் பணம் கொடுக்கப் போகிறோம். அவர் ஒன்றும் இலவசமாகக் கொடுக்கப் போவது இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.