கொரோனா தொற்றின் பாதிப்பு, இறப்பு, தடுப்பூசி மற்றும் குணமான விகிதம் ஆகியவற்றில் முன்னிலையில் உள்ள 10 மாநிலங்களின் விவரம்
இந்தியாவில் இதுவரை 14.78 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 25 லட்சத்திற்கும் அதிகமான டோஸ்கள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 2.60 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 5 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு கொரோனா இறப்புகூட பதிவாகவில்லை.
இந்தியாவின் 10 மாநிலத் தடுப்பூசி விவரம்
இந்தியாவின் பத்து மாநிலங்களில் 67.26% டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஆந்திரா பிரதேசம் - 61,77,974
பீகார் - 66,62,906
கேரளா - 71,07,072
மத்திய பிரதேசம் - 80,10,424
கர்நாடகா - 90,88,473
மேற்குவங்கம் - 1,04,38,235
குஜராத் - 1,19,01,842
உத்தரபிரதேசம் - 1,20,61,303
ராஜஸ்தான் - 1,26,59,815
மகாராஷ்டிரா - 1,53,22,367
குணமான விவரம்
இந்தியாவில் இதுவரை 1,48,17,371 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதன்படி, தேசிய அளவில் குணமான விகிதம் 82.33%. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,61,162 பேர் குணமடைந்துள்ளனர்.
10 மாநிலங்களில் மட்டும் 79.01% பேர் குணமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா - 67,752
உத்தரபிரதேசம் - 30,398
கேரளா - 18,413
டெல்லி - 17,862
சத்தீஸ்கர் - 16,931
தமிழ்நாடு - 14,043
மத்திய பிரதேசம் - 11,577
கர்நாடகா - 10,793
மேற்குவங்கம் - 10,664
பீகார் - 7,904
பாதிப்பு விகிதம்
10 மாநிலங்களில் 73.59% பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 66,358 பேருக்கும், அடுத்து உத்தர பிரதேசத்தில் 32,921 பேருக்கும், கேரளாவில் 32,819 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மகாராஷ்டிரா - 66,358
உத்தர பிரதேசம் - 32,921
கேரளா - 32,819
கர்நாடகா - 31,830
டெல்லி - 24,149
மேற்குவங்கம் - 16,403
ராஜஸ்தான் - 16,089
தமிழ்நாடு - 15,830
சத்தீஸ்கர் - 14,893
குஜராத் - 14,352
இறப்பு விகிதம்
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3293 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
மொத்த உயிரிழப்பில் 10 மாநிலங்களில் மட்டும் 78.53% பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா - 895
டெல்லி - 381
உத்தரபிரதேசம் - 264
சத்தீஸ்கர் - 246
கர்நாடகா - 180
குஜராத் - 170
ஜார்கண்ட் - 131
ராஜஸ்தான் - 121
பஞ்சாப் - 100
மத்திய பிரதேசம் - 98