இந்தியா

"நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களை அமல்படுத்துவதே மாநிலங்களின் கடமை"- ரவிசங்கர் பிரசாத்

"நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களை அமல்படுத்துவதே மாநிலங்களின் கடமை"- ரவிசங்கர் பிரசாத்

jagadeesh

நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதே மாநில அரசுகளின் கடமை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மாநில சட்டப்பேரவைகளுக்கென தனி உரிமைகள் உள்ளதாக சுட்டிக்காட்டினார். அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் பினராயி விஜயன் கூறினார்.

ஆனால், நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதே மாநில அரசுகளின் கடமை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். கேரள முதல்வரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். அரசமைப்புச் சட்டத்தின் 245 ஆவது பிரிவின் 2 ஆவது உட்பிரிவின்படி, நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தை மாநில அரசுகள் எதிர்க்க முடியாது என்றும் ரவிசங்கர் பிரசாத் விளக்கமளித்தார்.