மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்காள பொறுப்பு ஆளுநராகவும் இருந்த இல.கணேசன், தற்பொழுது நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார். இவரிடம் நம் செய்தியாளர் பாலவெற்றிவேல் சிறப்பு நேர்காணல் மேற்கொண்டார். அதை காணலாம்...
கேள்வி - “ஆளுநர் பதவி எப்படி உள்ளது?”
பதில் - “எந்த அனுபவமும் இல்லாதவர்கள்தான் ஆளுநர்களாக பொறுப்பேற்கின்றனர். ஆலோசகர்கள், உதவியாளார்கள் என அவர்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு குழு இருக்கிறது. இவர்களின் உதவியால், சிறிதுகாலத்தில் ஆளுநர்கள் தங்களின் வேலை என்ன என்பதை தெரிந்துக்கொள்வர்.
என்னைப் பொருத்தவரை நாகாலாந்தில் ஆளுநராக பணிபுரிவது எனக்கு ஒன்றும் கஷ்டமாக இல்லை. மணிப்பூரில் நான் பெற்ற அனுபவம், எனக்கு இங்கு பெரிதும் உதவுகிறது” என்கிறார்.
“வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக எல்லைப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கவேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?”
”இதுநாள் வரை பிரச்சனை இல்லாமல் இருந்தது. மணிப்பூரில் மோரே என்ற நகரம் உண்டு. அதம் கிழக்கு வாசல், பர்மா; வடக்கு வாசல், மியான்மர். இவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். இவர்களுக்கு எதற்கு எல்லைத்தடுப்பு பகுதி என நினைத்து நாகாலாந்து அரசாங்கம் ‘இங்கு தடுப்பு வேலிகள் தேவையில்லை’ என்று கோரிக்கை வைத்திருக்கிறது. ஆனால் போதைபொருள் கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகரிப்பால் எல்லைப்பகுதி தேவை என்று அரசாங்கம் நினைக்கிறது” என்றார்.
மேலும் அவர் நம்மோடு பேசுகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். “வரலாறு தெரிந்தவர்கள் இந்தச் சட்டத்தை எதிர்க்க மாட்டார்கள்” எனக்கூறி அவர் கொடுத்த பேட்டியின் முழு விவரத்தை தெரிந்துகொள்ள கீழ் இணைக்கப்படும் காணொளியை பார்க்கலாம்.