இ-ரிக்ஷாக்களில் தானானவே இயங்கக்கூடிய ஆட்டோமெட்டிக் ஹெட்லைட் வசதி விரைவில் கொண்டுவரப்பட உள்ளது.
டெல்லி உள்பட சில மாநில மக்கள் போக்குவரத்திற்காக இ-ரிக்ஷாக்களையும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய ரிக்ஷாக்கள் சார்ஜ் செய்யப்பட்டு பேட்டரி மூலம் இயங்கவல்லது. இதனிடையே விளக்குகளை எரிய விடுவதால் பேட்டரி விரைவில் தீர்ந்தும்விடும் என கருதி சில நேரங்களில் இ-ரிக்ஷா ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளை கூட அணைத்து வைத்து ஓட்டுவதாக விடுவதாக கூறப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது.
இந்நிலையில் தானாகவே இயங்கக்கூடிய ஹெட்லைட் வசதி விரைவில் இ-ரிக்ஷாவில் கொண்டுவரப்பட உள்ளன. இதன்மூலம் சூரிய வெளிச்சம் குறையும் நேரத்தில் ஓட்டுநர் லைட்டை ஆன் செய்ய தேவையில்லை. வெளிச்சம் குறைந்தால் தானாவே ஹெட்லைட்டுகள் எரிய ஆரம்பித்துவிடும். இதன் மூலம் விபத்துகள் குறையும் என நம்பப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்து துறை இணை செயலாளர் கூறும்போது, “ இ-ரிக்ஷாக்களில் இருக்கும் லைட் செட்டிங் முறையை மாற்றுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். அதன்புடி புதிய லைட்டிங் முறை கொண்டுவரப்பட உள்ளது. தானாகவே எரியக்கூடிய எல்இடி பல்புகள் இ-ரிக்ஷாக்களில் விரைவில் கொண்டுவரப்படும். இதன் மூலம் குறைந்த அளவிலான மின்சாரமே வீணாகும்” எனத் தெரிவித்தார். இ-ரிக்ஷாக்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் இந்த அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.