இந்தியா

தூங்குவதற்கு முன் எத்தனை குழந்தைகள் செல்போன் பார்க்கிறார்கள்? - ஸ்மிருதி இரானி தகவல்

தூங்குவதற்கு முன் எத்தனை குழந்தைகள் செல்போன் பார்க்கிறார்கள்? - ஸ்மிருதி இரானி தகவல்

Sinekadhara

தூங்குவதற்கு முன் 37 சதவிகிதம் குழந்தைகள் செல்ஃபோன் பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்திற்குப் பிறகு குழந்தைகள் ஆன்லைன் கல்வி பயிலக் கற்றதால், அவர்களிடம் செல்ஃபோன் பயன்பாடு அதிகரித்திருக்கிறதா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, குழந்தைகளிடம் செல்ஃபோன் பயன்பாடு குறித்த தரவுகள் ஏதுமில்லை என்றும் ஆனால், 37 சதவிகித குழந்தைகள் தூங்குவதற்கு முன்பு செல்ஃபோன் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். 23 சதவிகித குழந்தைகள் படுக்கையில் செல்ஃபோனை பயன்படுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.