சித்தராமையா pt web
இந்தியா

'மேகதாது திட்டமே நிரந்தர தீர்வு'.. மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!

காவிரி படுக்கையின் அவல நிலையை போக்க நிரந்தர தீர்வு மேகதாது திட்டம் செயல்படுத்துவது மட்டுமே என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

PT WEB

கர்நாடக நீர்வள திட்டங்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பரப்புவதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் குற்றம் சாட்டியிருந்தார்.

குறிப்பாக மேகதாது அருகே புதிய அணை கட்டுவது தொடர்பாக நீர் பங்கிட்டு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பட்டியலிட்டும் அது குறித்து விவாதிக்க வில்லை என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மேகதாது அணை-சித்தராமையா

இந்நிலையில் மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பல்வேறு நீர்வள திட்டங்களை மேற்கோள் காட்டி ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, “காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பட்டியலிடப்படுவது மட்டும் தான் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கும் பிரதமருக்கும் உள்ள வேலையா?

திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கும் பிரதமருக்கும் உள்ளது. மேகதாது விவகாரத்தை செயல்படுத்துவதில் பிரதமரும் மத்திய அமைச்சரும் தோற்றுவிட்டனர் என கர்நாடக மக்கள் கருதுவதில் தவறா? காவிரி படுக்கையின் அவல நிலையை போக்க நிரந்தர தீர்வு மேகதாது திட்டம் செயல்படுத்துவது மட்டுமே.

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

மேகதாது திட்டத்தை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர்வள ஆணையம் பரிசீலித்து தேவையான அனுமதி மற்றும் ஒப்புதல்களை வழங்குவதன் மூலம் பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள நகர மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் ” என தெரிவித்துள்ளார்.