இந்தியா

ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் உத்தவ் தாக்கரே

ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் உத்தவ் தாக்கரே

webteam

மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆளுநரை சந்திக்கவுள்ளார்.

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பதயேற்க உள்ளார். சிவசேனா கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழுத் தலைவராக ஒருமனதாக அவர் தேர்வானார். மகாராஷ்டிர முதலமைச்சர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகியதைத் தொடர்ந்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. 3 கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கான தீர்மானம் முதலில் நிறைவேற்றப்பட்டது. 

இதையடுத்து உத்தவ் தாக்கரே வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை ராஜிவ் பவனில் சென்று உத்தவ் தாக்கரே சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார். முன்னதாக, வீட்டிலிருந்த தனது தந்தை பால் தாக்கரேவின் புகைப்படத்திற்கு உத்தவ் தாக்கரே மரியாதை செய்தார்.