இந்தியா

முடிந்தது ஏலம்! 5ஜி சேவை குறித்து தொலைத்தொடர்பு அமைச்சர் கொடுத்த மாஸ் தகவல்

முடிந்தது ஏலம்! 5ஜி சேவை குறித்து தொலைத்தொடர்பு அமைச்சர் கொடுத்த மாஸ் தகவல்

JustinDurai

''இந்தியாவில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தும்'' எனத் தெரிவித்துள்ளார் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சேவை எப்போது அறிமுகமாகும் என அனைவரும் காத்திருந்த நிலையில், 5ஜி அலைக்கற்றைக்கான மெகா ஏலம் நிறைவடைந்துள்ளது. இந்த ஏலத்தில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ''ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் ஏலதாரர்களுக்கு 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்தியாவில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தும். இந்திய டெலிகாம் சந்தை உலகிலேயே மிகவும் மலிவு விலையில் உள்ளது. 5ஜியில் கூட அந்த போக்கு தொடரும் என்று நம்புகிறேன்.  உலகிலேயே மலிவான விலையில் 5ஜி சேவை நமக்கு கிடைக்கும்.

செல்போன்கள் தயாரிப்பில் உலகிலேயே இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களில் 25 முதல் 30 சதவிகிதம் 5ஜி தொழில்நுட்ப வசதி கொண்டவை. ஒவ்வொரு ஆண்டும் 5ஜி போன்களின் விலை குறைந்து வருகிறது. இன்னும் ஒரு வருடத்திற்குள் பெரும்பாலான செல்போன்கள் 5ஜி வசதி கொண்டதாக இருக்கும்'' என்றார்.

இதையும் படிக்க: ’எங்கள் ஒப்புதலுடன் வரியா?; ஜிஎஸ்டி கூட்டத்தில் நடந்து இதுதான்’ - பழனிவேல் தியாகராஜன்