ஒரு காலத்தில் இந்தியர்களால் விண்வெளி ஆராய்ச்சியில் சாதிக்க முடியுமா என்று நினைக்கின்ற நாடுகளுக்கு மத்தியில் தற்போது நம்மை வியந்து பார்க்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக சூரியனிலும் நிலவிலும் வெற்றி கொடி பறக்கவிட்டுள்ளோம். பூமித்தாயின் மடியில் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், மற்ற கோள்களைப் பற்றிய புரிதல், மற்ற கோள்களில் மூலம் கிடைக்கும் விஞ்ஞானத்தை நமது பூமித்தாயோடு பொருத்திப் பார்க்க வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயம். கடந்த இரண்டு அறிவியல் திட்டங்கள் இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமையை கொடுத்துள்ளது. 150 கோடி மக்களும் ஒரே இலக்கை நோக்கி சிந்தித்தோம் என்றால் நம்மால் எதையும் அடைய முடியும்.”
”எப்போதெல்லாம் நமக்கு பிரச்சனைகள் வருகிறது என நினைக்கிறோமோ அப்போது நமக்கு தீர்வு கிடைக்கிறது. இயற்கை அன்னை எப்போதும் நம்முடன் பேசிக் கொண்டிருக்கிறாள். எந்த லித்தியமும் மழையாக திடீரென்று வானத்திலிருந்து விழவில்லை. நம்முடன் நம் மலைப்பகுதியில் உறங்கிக் கொண்டிருந்தது. நாம் அதை உணரவில்லை. எப்போது நமக்குத் தேவையையும் தேடலும் அதிகரிக்கிறதோ அப்போது லித்தியத்தை பெற்றுள்ளோம். இதன் மூலம் இந்தியத்துவ தொழில்நுட்பம் வளரப்போகிறது. இன்னும் சில காலங்களில் மிகப்பெரிய வெற்றியை லித்தியம் நமக்கு கொடுக்கப் போகிறது."
ஜம்மு காஷ்மீர் மலைப்பகுதியில் கிடைக்கும் லித்தியம் மட்டுமின்றி ஆந்திரம் மற்றும் கர்நாடக பகுதியில் லித்தியம் இருப்பதற்கான பிபிஎம் அளவு இருப்பதை நாம் கண்டறிந்துள்ளோம். தென்னிந்திய பகுதியில் அதிக அளவில் இருப்பதை கண்டறிந்துள்ளோம். அதைப் பிரித்தெடுத்து, உபயோகிக்கும் லித்தியமாக மாற்றும் போது முன்னேறுவோம். அர்ஜென்டினா, பொலிவியா, சிலி ஆகிய மூன்று நாடுகள் தான் லித்தியம் தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறது. ஆனால் தற்போது இந்தியா மூன்றாவது பெரிய நாடாக முன்னேறியுள்ளது. தென்னிந்திய பகுதிகளில் லித்தியம் இருப்பதற்கான ஆதாரத்தை கண்டறிந்துள்ளதன் மூலம் லித்தியம் உற்பத்தியில் இந்தியா விரைவில் முதலிடம் செல்லும். இதன் மூலம் நமது வளர்ச்சி பிரகாசமாக இருக்கிறது.
”எந்த ஒரு தொழில் நுட்பமும் அதனுடைய ஆரம்ப காலத்தில் அதனுடைய விலை அதிகமாக இருக்கும். ஆனால், அதனுடைய உற்பத்தி அதிகமாகும் போது விலை குறையும். இயற்கை கொடுத்த கொடையான லித்தியம் நம்மிடம் இருப்பதால், தேவைக்கு வரும்போது அதன் விலை வெகுவாக குறையும். லித்தியம் உற்பத்தி சங்கிலி அதிகரிக்கும் போது விலையும் குறையும்.
மூலப் பொருட்கள் அதிகமாக கிடைப்பதால் லித்தியம் பேட்டரி பயன்படுத்தும் மின்சார வாகனங்களின் விலையும் குறையும்” என்றார்.