இந்தியா

சாலையில் பாடம் படித்த பள்ளி மாணவர்கள்.

சாலையில் பாடம் படித்த பள்ளி மாணவர்கள்.

webteam

உத்தரகண்ட் மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சாலையில் பாடம் படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள அரசு பள்ளியின் கட்டிடம் ஒன்று மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. எனவே இங்கு பயிலும் மாணவர்களின் நலன் கருதி ஆரம்ப பள்ளி வகுப்பில் பயிலும் குழந்தைகள் அருகிலுள்ள தனியார் கட்டிடம் ஓன்றிற்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த தனியார் கட்டிடம், அதன் உரிமையளரால் நேற்று தரைமட்டமாக்கப்பட்டது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கட்டிடம் இடிக்கப்பட்டதால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பின்னர், அந்த பள்ளிக்கு வந்த ஆசிரியர் பாபில் என்பவர், மாணவர்களை சாலையில் அமர்த்தி பாடம் எடுத்தார். 

தீபாவளி பண்டிகை முடிந்து பள்ளிக்கு வருகையில் கட்டிடம் முழுவதும் இடிக்கப்பட்டிருந்தது எனவும், உரிமையாளர் தக்க பதிலை கூறவில்லை என்றும் ஆசிரியர் குற்றம் சாட்டியுள்ளார். வேறு வழி இல்லாமல் மாணவர்களை சாலையில் வைத்து பாடம் எடுக்கும் அவல நிலை ஏற்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.