இந்தியா

ஊழல்.. வன அழிப்பு.. பிரதமருக்கு 18 பக்க கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி!

ஊழல்.. வன அழிப்பு.. பிரதமருக்கு 18 பக்க கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி!

sharpana

இந்தியாவில் ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு  அதிகரித்துவிட்டதால் கோபமடைந்த 16 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் சுதந்திரத் தினத்தன்று இப்படியொரு முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் தனது தற்கொலைக்கான காரணத்தை 18 பக்க அளவில் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்திருக்கிறார். அக்கடிதத்தில், ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டோடு அழிந்துவரும் காடுகள் குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், தீபாவளியின்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பட்டாசுகளை வெடிக்க தடைவிதிக்கவேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.   ஹோலி பண்டிகையின்போது  ஆரோக்கியத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கெமிக்கல் கலந்த கலர் பவுடரை பூசுவதையும் தடை செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது, எல்லாவற்றையும்விட சிறுமி சுட்டிக்காட்டிய மிகமுக்கியமான கோரிக்கை பலரையும் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது. ’பெற்றோர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் பிள்ளைகள் இருக்கும் நாட்டில் நான் விரும்பவில்லை’ என்றும் உருக்கமாக எழுதிவைத்துள்ளார்.