இந்தியா

கசிந்த ரஃபேல் ஆவணங்களை கொண்டு விசாரிக்கலாமா? - முடிவை தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்

கசிந்த ரஃபேல் ஆவணங்களை கொண்டு விசாரிக்கலாமா? - முடிவை தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்

rajakannan

வெளியில் கசிந்த ரஃபேல் ஆவணங்கள் அடிப்படையில் சீராய்வு மனுவை விசாரிக்கலாமா, கூடாதா என்பது கு‌றித்து முதலில் முடிவெடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கசிந்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்த முடியுமா என்பதை முடிவு‌ செய்த பின்பே‌ ரஃபேல் ஒப்பந்தத்தில்‌‌‌ முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது பற்றி விசாரிக்க முடியும் எ‌ன நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, இதுகுறித்து வாதாடிய அரசு தலைமை வழ‌‌க்கறிஞர் கே.கே. வேணுகோபால், பாதுகாப்பு முக்கியத்துவம் மிக்க ஆவணத்தை உரிய ஒப்புதலின்றி யாரும் நீதி‌மன்றத்தில் ‌சமர்ப்பிக்க‌ முடியாது என்றார். 

இந்நிலையில், பத்திரிகைக‌ளில் வெளியாகி சமர்ப்பிக்கப்பட்ட ஆவண‌ங்களை சீராய்வு மனுவிலிருந்து நீக்க மனுதாரர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட வேண்டும் என்று கே.கே.‌ வேணுகோபால் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து வாதாடிய மனுதாரர் பிரஷாந்த் பூஷண்‌, கடந்த நவம்பர் 18‌ம் தேதியிலிருந்தே ஆவணங்கள் கசிந்ததாகவும் அப்போதே‌ அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவி‌ல்லை என்றும் கேள்வி எழுப்பினார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் முதலில் ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தலாமா என்று முடிவு செய்ய‌ப்பட்டு பின்னர் விரிவான ‌‌விசாரணை நடைபெறும் எனக் கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 

முன்னதாக ரஃபேல் வழக்கில் முறைகேடு நடைபெறவில்லை என்ற தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டும் என வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண்‌ உள்ளிட்டோர்‌ மனு செய்திருந்தன‌ர். ஹிந்து பத்திரிகை‌யில் வெளியான ஆவணங்களையும் அவர்கள் இணைத்திருந்தனர். ஆனால், இந்த ‌ஆவணங்கள் தங்கள் ‌‌அனுமதியுடன் தாக்கல் செய்‌யப்படவில்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என‌ அரசுத் தரப்பு கோரியிருந்தது.