இந்தியா

சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் நியமினத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் நியமினத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

webteam

சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா, சிபிஐ-யின் சிறப்பு இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். சிபிஐ நடத்திய ஒரு வழக்கு விசாரணையில் அஸ்தானாவின் பெயர் அடிபட்டதாக புகார் கூறப்பட்டது. அதோடு ஸ்டெர்லிங் பையோடெக் நிறுவனம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக, சிபிஐ தொடுத்த வழக்கில்,  ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் இருந்த டைரியில், அஸ்தானாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இந்தக் காரணங்களை வைத்து அவரது நியமனம் சட்டவிரோதம் எனக் கூறி மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். 

’அஸ்தனாவின் நியமனம் சட்டவிரோதம். சிபிஐ-யின் சுதந்திரத்தை பறிக்கவே மத்திய அரசு இவ்வாறு செய்து வருகிறது’ என்று மனுவில் கூறியிருந்தார் பிரஷாந்த் பூஷன். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.