இந்தியா

மாடலிங் துறையில் கால்பதித்த சாரா தெண்டுல்கர்

மாடலிங் துறையில் கால்பதித்த சாரா தெண்டுல்கர்

JustinDurai
மருத்துவ பட்டப்படிப்பு முடித்த சாரா தெண்டுல்கர் மாடலிங் துறையில் கால்பதித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் தெண்டுல்கர் - அஞ்சலி தம்பதியினரின் மூத்த மகள் சாரா தெண்டுல்கர். மும்பை அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு லண்டனில் மருத்துவ பட்டப்படிப்பை முடித்தார் சாரா. இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆக்டிவ்வாக இருக்கும் இவருக்கு சுமார் 16 லட்சம் பாலோவர்ஸ் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டு மாடலிங் ஆசையையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் சாரா தெண்டுல்கர் தற்போது மாடலிங் துறையில் கால்பதித்துள்ளார். சமீபத்தில் இவர் அஜியோ நிறுவனத்தின் ஆடை பிரிவான அஜியோ லக்ஸ்க்கான விளம்பர பிரச்சாரத்தில் மாடலிங்காக அறிமுகமாகியுள்ளார்.
இந்த விளம்பர பிரச்சாரத்தில் நடிகர் பனிதா சந்து மற்றும் டானியா ஷ்ராஃப் ஆகியோருடன் சாரா போஸ் கொடுத்துள்ளார். சாரா தெண்டுல்கரின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த விளம்பரத்தில், மூவரும் ஒன்றாகவும் தனித்தனியாகவும் போஸ் கொடுக்கிறார்கள்.
ஏற்கனவே சாரா தெண்டுல்கர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம் உடைகள் பிராண்டிற்கு போஸ் கொடுக்கும் விளம்பரம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். மாடலிங்கை தொடர்ந்து விரைவில் சினிமாவிற்கு அவர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சச்சின் மகன் அர்ஜுன் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதிக்காத நிலையில், சாரா தனது மாடலிங் துறையில் சாதிப்பாரா என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.