இந்தியா

தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்

தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்

Veeramani

தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Same sex marriage எனப்படும் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி தொடரப்பட்ட மனு மீது மத்திய அரசு பதில் அளித்திருக்கிறது. அதன்படி, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ்வதும், அவர்கள் திருமண வாழ்க்கையை மேற்கொள்வதும் இந்திய திருமண கலாச்சாரத்தின்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல எனவும் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

தன் பாலின உறவை சட்டவிரோதம் என அறிவித்த பிரிவு 377 நீக்கப்பட்டு இருந்தாலும், இதை அடிப்படையாகக் கொண்டு தன்பாலின திருமணத்தை அடிப்படை உரிமை என யாரும் கோர முடியாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது