இந்தியா

சபர்மதி சிறைச்சாலை காந்தி கோயிலானது

சபர்மதி சிறைச்சாலை காந்தி கோயிலானது

webteam

காந்தியடிகள் முதல்முறையாக கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்ட சபர்மதி சிறைச்சாலை இன்று கோயிலாக மாறியுள்ளது. இந்த அறையில்தான் தனது சிறை வாசத்தை அனுபவித்தார் காந்தி.

அகமதாபாத்தில் உள்ளது சபர்மதி ஆசரமம். அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், சபர்மதி சிறைக்கு உள்ளே கைதிகளுக்கான கோயில் அமைந்துள்ளது. இந்த சபர்மதி மத்திய சிறையில் 10 நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்தார் காந்தி. அவர் மார்ச் 11, 1922 இல் கைது செய்யப்பட்டு 10-க்கு 10 அடி அளவுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கு காந்தி கோலி என பெயரிடப்பட்டுள்ளது. அவர் வசித்திருந்த அறையில் பல கைதிகள் தினம் காலை மற்றும் மாலை வேளைகளில் விளக்கேற்றி அவரை கௌரவித்து வருகின்றனர்.

காந்தி உடலளவில் தற்போது உயிருடன் இல்லை, ஆனால், கைதிகள் மனதில் அவர் உடல் அளவிலும், நினைவிலும் தொடர்ந்து வாழ்கிறார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்கிறார் இங்கே சிறைவாசம் அனுபவித்த நரேந்திராசின். விடுதலை போராட்டத்தின் போது இதே சிறைச்சாலையில் காந்தியைத் தவிர்த்து, சர்தார் வல்லபாய் பட்டேலும் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.