உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் 5 லட்சம் ரூபாய் செலவில் தங்கத்தில் முகக்கவசம் செய்து அதை அணிகிறார் ஒருவர். அவரை அப்பகுதி மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
தங்க பாபா என அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் மனோஜ் சின்கார் என்பவர், தங்க முகக்கவசத்திற்காக ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த பல மாதங்களாகவே கொரோனாவில் இருந்து தப்பிக்க தங்க முகக்கவசத்தை அணிந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தெரிவிக்கையில், ‘இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும், மாஸ்க் சரியாக அணிவதில்லை. இந்த தங்க மாஸ்க், மூன்று வருடங்கள் வரை நீடிக்கும். மிகவும் பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த மாஸ்க், மூன்றடுக்கு பாதுகாப்பு கொண்டது. ஆகவே எவ்வித பிரச்னையும் இதில் ஏற்படாது” எனக்கூறியுள்ளார்.