இந்தியா

ராம் ரஹீமால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.14 லட்சம் இழப்பீடு

ராம் ரஹீமால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.14 லட்சம் இழப்பீடு

webteam

ஹரியானா சாமியார் ராம் ரஹீம் சிங்கால் பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கும் தலா 14 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது கடந்த 2002 ஆம் ஆண்டு பாலியல் பலாத்கார புகார் எழுந்தது. ஆசிரமத்தில் உள்ள பெண்கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு 
எழுந்தது. 14 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பை வெளியிட்ட நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என்று அறிவித்தது.

இந்நிலையில், அவருக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில், சாமியாருக்கு இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள் வீதம் 20 தண்டனையும், பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கு தலா 14 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.