லைபீரியக் கொடியுடன் பிரேசிலில் உள்ள "போர்ட் டு அகோ"-வில் இருந்து புறப்பட்ட சரக்கு கப்பல், பஹ்ரைனுக்கு சென்று கொண்டிருந்தது. சோமாலியா கடற்பகுதியில் வந்த போது, கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். அந்த கப்பலில் இந்தியர்கள் 15 பேர் உட்பட 21 பேர் இருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த இந்திய கடற்படை, கப்பலில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. அதன்படி, ஐ.என்.எஸ் சென்னை கப்பல் சம்பவ இடத்துக்கு விரைந்தது.
பின்னர் கப்பலைவிட்டு வெளியேற ஹெலிகாப்டர் மூலம் கொள்ளையர்களுக்கு கப்பற்படையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய கடற்படை கமாண்டோக்கள் கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அதற்குள் கொள்ளையர்கள் தப்பியோடிய நிலையில், 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து முழுச் செய்தியை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.