நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக பாஜக கூட்டணி முன்னிறுத்திய ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ல் முடிவடையும் நிலையில், நாட்டின் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17ல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் அகரவரிசைப்படி மாநிலவாரியாக எண்ணப்பட்டது. இதில், ராம்நாத் கோவிந்துக்கு 65.35 சதவீத வாக்குகளும், எதிர்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட மீராகுமாருக்கு 34.35 சதவீத வாக்குகளும் கிடைத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் மாநில முன்னாள் ஆளுநரான ராம்நாத் கோவிந்த் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.