இந்தியா

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் தடையின்றி தொடர்கிறது: டிரஸ்ட்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் தடையின்றி தொடர்கிறது: டிரஸ்ட்

Veeramani

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் தடையின்றி தொடர்கிறது என்று ஸ்ரீ ராம் ஜன்மபூமி டிரஸ்ட் தெரிவித்திருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில்  ராமர் கோயிலின் கட்டுமான நிர்வாகத்தை மேற்கொள்ளும் ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா டிரஸ்ட், 'ராமர் கோயில்' கட்டுமானம் தடையின்றி தொடர்கிறது என்று தெரிவித்திருக்கிறது. "சுமார் 1,20,000 கன மீட்டர் இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன, கோயிலின் அடித்தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலையில் ஈடுபட்டுள்ள அனைத்து பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்" என்று அறக்கட்டளை ட்வீட் செய்துள்ளது.