இந்தியா

இந்தியாவிலும் கூகுள், பேஸ்புக்கிடம் செய்தி நிறுவனங்கள் பைசாவசூலிக்கும் சட்டம்: சுஷில் மோடி

இந்தியாவிலும் கூகுள், பேஸ்புக்கிடம் செய்தி நிறுவனங்கள் பைசாவசூலிக்கும் சட்டம்: சுஷில் மோடி

EllusamyKarthik

மாநிலங்களவை உறுப்பினரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷில் மோடி ஆஸ்திரேலிய நாட்டில் இயற்றப்பட்டுள்ள சட்டம் போல நம் நாட்டின் செய்தி நிறுவனங்கள் இணையத்தில் வெளியிடும் கன்டென்டுக்கு பணம் கொடுக்க வேண்டுமென்ற சட்டத்தை நாம் இயற்ற வேண்டும் என கேள்வி நேரத்தின் போது வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் கூகுள், பேஸ்புக் மாதிரியான டெக் சாம்ராட்கள் அந்த கன்டென்டில் கிடைக்கும் விளம்பர வருவாயை சம்மந்தப்பட்ட செய்தி ஊடகம் அல்லது பத்திரிகை நிறுவனத்துடன் பகிர வேண்டும். அது கொரோனாவுக்கு பிறகு நஷ்டத்தில் இயங்கி வரும் பத்திரிகை நிறுவனங்களை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உதவும் என அவர் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய நாட்டு செய்தி ஊடகங்கள் பேஸ்புக் மற்றும் கூகுளில் பகிரும் கண்டென்ட்டுகளுக்கு கிடைக்கும் லாபத்தில், அந்நிறுவனங்களுக்கு பங்கு கொடுக்க வேண்டுமென சொல்லி சட்டம் இயற்றியுள்ளது ஆஸ்திரேலிய அரசு. முன்னதாக இந்த சட்டத்திற்கு எதிராக அதிருப்தி தெரிவித்திருந்தன பேஸ்புக்கும், கூகுளும். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழி எங்களுக்கு இல்லை என சொல்லியிருந்தது கூகுள். ஆனால் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக தீர்வினால் அதை கைவிட்டது கூகுள். அதே போல பேஸ்புக் நிறுவனமும் தற்போது இந்த சட்டத்தில் சமரசம் செய்து கொண்டுள்ளது. 

இந்த நிலையில் தான் இந்திய ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கும் இதே போல ஒரு சட்டம் வேண்டும் என சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.