சமஸ்கிருதம் மொழியை பேச கற்றுக் கொள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் புதிய ஸ்கோர்ஸ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி வந்ததும் மொழி விவகாரத்தில் இரண்டு விதமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. ஒன்று இந்தி மொழியை திணிக்க முயற்சிக்கிறது என்பது. அதேபோல், சமஸ்கிருதம் மொழிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற விமர்சனம்.
இந்நிலையில், சமஸ்கிருதம் மொழியை பேச கற்றுக் கொள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் 6 மாத கால புதிய ஸ்கோர்ஸ் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே சமஸ்கிருதம் கற்க பாடத்திட்டம் அமைத்து கற்றுக் கொடுப்பது இதுதான் முதல் முறை. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதனை தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் மிக பழமையான சமஸ்கிருதம் மொழி பேச்சுவழக்கில் இருந்து மறைந்து, வேதங்கள் மற்றும் மந்திர ஸ்லோகங்களில் வெறும் எழுத்துருவாக மட்டுமே இருந்துவருகிறது. இந்நிலையில், சமஸ்கிருதம் மொழி முன்பு இருந்ததைப்போல் மக்களிடையே பேச்சு மொழியாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஆறுமாத கால பயிற்சி வகுப்புகளை நடத்த குஜராத் பல்கலைக்கழகம் தீர்மானித்தது. அதன் அடிப்படையில் இன்று சமஸ்கிருத ஸ்கோர்ஸ் தொடங்கப்பட்டுள்ளது.