இந்தியா

ரோஹிங்கியர்கள் சட்டவிரோதிகள்: ராஜ்நாத் சிங்

ரோஹிங்கியர்கள் சட்டவிரோதிகள்: ராஜ்நாத் சிங்

webteam

இந்தியாவுக்குள் புகும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகள் அல்ல, சட்டவிரோத குடியேறிகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற மனித உரிமை ஆணைய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ரோஹிங்யாக்களை திரும்ப ஏற்றுக்கொள்ள மியான்மர் தயாராக உள்ள நிலையில், அவர்களை இங்கிருந்து திருப்பி அனுப்ப சிலர் எதிர்ப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ரோஹிங்யாக்கள் விவகாரத்தில் இந்திய அரசு சர்வதேச விதிகள் எதையும் மீறவில்லை என்றும், மியான்மர் நாட்டில் ராணுவ நடவடிக்கை காரணமாக ரோஹிங்யா இஸ்லாமியர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருவதாகவும் கூறினார். இந்த சமயத்தில் இந்தியாவுக்குள் புகும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகள் இல்லை என்றும், அவர்கள் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.