இந்தியா

அயோத்தி தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்: ரஜினிகாந்த்

அயோத்தி தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்: ரஜினிகாந்த்

webteam

அயோத்தி நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

70 ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


‘இந்த தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால் திருப்தி இல்லை’ என்று வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் இந்த தீர்ப்பு குறித்து கூறும்போது, ’உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து இந்த தீர்ப்பை மதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.