இந்தியா

நீதிபதிக்கே இந்த நிலைமையா? - மார்பிங் போட்டோக்களை வைத்து ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்

நீதிபதிக்கே இந்த நிலைமையா? - மார்பிங் போட்டோக்களை வைத்து ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்

Sinekadhara

ராஜஸ்தானில் ரூ. 20 லட்சம் தராவிட்டால் சமூக ஊடங்களில் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை பொதுவெளியில் பகிர்ந்துவிடுவேன் என பெண் நீதிபதியையே மிரட்டிய நபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

பெண் நீதிபதியின் புகைப்படங்கள அவருடைய சமூக ஊடகங்களில் இருந்து டவுன்லோடு செய்து, அதனை மார்பிங் செய்து, நீதிமன்றத்துக்கே பரிசுபோல பேக்செய்து அனுப்பியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 28ஆம் தேதி, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ததாகவும், குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த முதற்கட்ட வழக்குப்பதிவில், பிப்ரவரி 7ஆம் தேதி என்னுடைய ஸ்டெனோகிராபர், எனது குழந்தையின் பள்ளியிலிருந்து ஒரு பார்சல் வந்திருப்பதாக கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார். பார்சல் கொடுத்த நபரிடம் அவர் யார் என பெயர் கேட்டதற்கு பதிலேதும் சொல்லாமல் சென்றுவிட்டதாக தெரிவித்தார். அந்த பார்சலில் சில ஸ்வீட்களும், மார்பிங் செய்யப்பட்ட எனது புகைப்படங்களும், ஒரு கடிதமும் இருந்தது.

அந்த கடிதத்தில், இந்த புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிடவேண்டாம் என நினைத்தால் ரூ.20 லட்சம் கொடுக்கவேண்டும் என்றும் எழுதியிருந்தது. ’ரூ.20 லட்சம் பணத்துடன் தயாராக இருங்கள். இல்லாவிட்டால் உன்னை அல்லது உனது குடும்பத்தின் பெயரை கெடுத்துவிடுவேன். நேரம் மற்றும் இடம் விரைவில் தெரிவிக்கப்படும்’ என்று எழுதியிருந்தது. அதனையடுத்து 20 நாட்கள் கழித்து அதேபோன்ற மற்றொரு பார்சல் வீட்டிற்கு வந்ததால் தற்போது புகாரளித்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்களை ஆய்வுசெய்த போலீசார் பார்சல் கொண்டுவந்து கொடுத்த நபர் 20 வயது மதிக்கத்தக்கவர் என்று கண்டறிந்துள்ளனர். மேலு, இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும அவர் குறிப்பிட்டுள்ளார்.