ரயில்களில் 1 முதல் 4 வயதுள்ள குழந்தைகளுக்கு தனியாக பயணச்சீட்டு வாங்க வேண்டும் என வெளியான தகவல்கள் தவறு என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் 6, 2020-ல் ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டது. அதன்படி இப்போதுவரை 5 வயதுக்குட்பட்ட தங்கள் குழந்தைகள் இலவசமாக பயணித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு தனி படுக்கையோ அல்லது இருக்கையோ வழங்கப்பட மாட்டாது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில் குழந்தைகளுக்கான இச்சலுகை ரயில்வே மாற்றியுள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகினது. இதுதொடர்பாக சுற்றறிக்கை வழியாக ரயில்வே அமைச்சகம் சுற்றறிக்கை வழியாக தெளிவுபடுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் `குழந்தைகளின் ரயில் பயணம் தொடர்பாக விதிமுறைகளில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை’ என்றும் ரயில்வே கூறியுள்ளது.
மேலும் ரயில்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு இல்லை என்றும் தேவைப்பட்டால் பணம் செலுத்தி தனி படுக்கை பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஏற்கனவே உள்ள விதிமுறையையும் ரயில்வே சுட்டிக்காட்டியுள்ளது.