இந்தியா

ராஜதானி,சதாப்தி ரயில்களுக்கு கட்டணம் குறைப்பு

ராஜதானி,சதாப்தி ரயில்களுக்கு கட்டணம் குறைப்பு

Rasus

அடுத்த மாதம் ரயில்வே அறிவிக்கும் புதிய திட்டத்தின்படி ராஜதானி மற்றும் சதாப்தி போன்ற அதிவேக ரயில்களில் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும்.

ஏப்ரல் மாதத்திலிருந்து, சாதாரண ரயில்கள் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு செய்து வெய்டிங் லிஸ்டில் இருப்பவர்களுக்கு இடம் காலியாக இருக்கும் மாற்று ரயில்களில் பயணம் செய்ய எற்பாடு செய்து தரவுள்ளது இந்திய ரயில்வே. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே இந்த சேவையை பெற ஒப்புக்கொள்ள வேண்டும்.

‘விகல்ப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், ராஜதானி, சதாப்தி, துரந்தோ மற்றும் சுவிதா ரயில்களில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. டிக்கெட் ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆண்டுக்கு ரூ.7,500 கோடியை வாடிக்கையாளர்களுக்கு திருப்பி கொடுக்கிறது ரயில்வே.

இந்த புதிய திட்டத்தின் மூலம், அந்தத் தொகை வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது. மேலும் வெய்டிங் லிஸ்டில் இருக்கும் ரயில் பயணிகளுக்கும் பயன் கிடைக்கும். ரயிலில் இருக்கும் இடங்களை முழுமையாக பயன்படுத்தவும் முடியும். இதனால் ரயில்வேயின் வருமானம் அதிகரிக்கும் எனக் கூறியுள்ளது ரயில்வே நிர்வாகம்.