ராகுல் காந்தி புதிய தலைமுறை
இந்தியா

தமிழ்நாடு வந்தடைந்தார் ராகுல் காந்தி! அடுத்தடுத்த திட்டங்கள் என்னென்ன?

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று தமிழ்நாடு வந்திருக்கிறார்.

Angeshwar G

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிந்துள்ள நிலையில் இன்று தமிழ்நாடு வந்தடைந்தார் எம்.பி. ராகுல் காந்தி.

முன்னதாக மோடி பெயர் தொடர்பாக பேசிய அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இதன் காரணமாக ராகுல் தனது எம்.பி.பதவியையும் இழந்திருந்தார். இதனையடுத்து ‘சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை குஜராத் உயர்நீதிமன்றத்தில் வைத்தார் ராகுல். அதை உயர்நீதிமன்றம் நிராகரிக்கவே, ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

rahul gandhi

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் எம்.பி.பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை நாடாளுமன்றம் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி அவரது தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எம்.பி.யாக கலந்துகொண்டார். கூட்டத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதும் உரையாற்றினார்.

இந்நிலையில் இன்று தமிழகம் வந்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. டெல்லியிலிருந்து கோவை வந்துள்ள அவர், அங்கிருந்து கார் மூலம் உதகை சென்று அங்குள்ள தோடர் இன மக்களை சந்தித்து உரையாட திட்டமிட்டுள்ளார்.

RahulGandhi

தொடர்ந்து, சொந்தத் தொகுதியான வயநாடு தொகுதிக்கு செல்ல உள்ளார். இதற்காக தமிழகம் வழியாக கேரளா செல்ல திட்டமிட்டுள்ளார் ராகுல். வயநாடு செல்லும் வழியில் பொம்மன் - பெள்ளி தம்பதியை பார்க்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் உதகையில் விண்வெளி வீரர் ராகேஷை சந்தித்து கலந்துரையாடிவிட்டு, அப்பகுதியிலுள்ள சாக்லேட் தயாரிக்கும் பணிகளை பார்வையிட உள்ளார்.