சர்வதேச நகரமான ஆரோவில்லின் வளத்தை அழிக்கும் எண்ணம் இல்லை என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாரதியாரின் 139ஆவது பிறந்தநாளையொட்டி அவர் வாழ்ந்த இல்லத்திற்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன், அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பாரதியார் பிறந்தநளை கொண்டாடுவது மகிழ்ச்சி. பாதியார் பிறந்தநாளையொட்டி இந்த வருடம் முழுவதும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பசுமையான புதுவையை, வளர்ச்சியடைந்த புதுச்சேரியாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் பாரதியாருக்கு வானுயர சிலை அமைப்பதற்காக குழு அமைக்க முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
ஆரோவில்லில் அன்னையின் கனவு திட்டத்தை நிறைவேற்ற முயற்சிகள மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கிருக்ககூடிய வளங்களை அழிக்ககூடிய எண்ணம் இல்லை. திட்டத்திற்காக அப்புறப்படுத்தப்படுகின்ற மரங்கள் மாற்று இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடப்பட்டு வருகிறது'' என்றார்.