இந்தியா

புதுச்சேரி: பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி உட்பட மூன்று அமைச்சர்கள்!

புதுச்சேரி: பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி உட்பட மூன்று அமைச்சர்கள்!

EllusamyKarthik

அண்மையில் நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. மொத்தம் 9 தொகுதிகளில் போட்டியிட்டு அதில் மண்ணாடிப்பட்டு, ஊசுடு, காமராஜ் நகர், காலாபட்டு, நெல்லித்தோப்பு மற்றும் மணவெளி என ஆறு தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடினர். அதன் பலனாக தேசிய ஜனநாயகக் கூட்டணி புதுச்சேரியில் ஆட்சி அமைத்துள்ளது. 

இந்நிலையில் புதுச்சேரி ஆட்சி அதிகாரத்தில் பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி உட்பட மூன்று அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி. என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான உறவு சுமூகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

மேலும் மண்ணாடிப்பட்டு தொகுதி உறுப்பினர் நமச்சிவாயம் பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அடுத்த இரண்டு நாட்களில் பாஜகவின் அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்து கொள்வார்கள் எனவும் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். அப்போது துணை முதல்வராக நமச்சிவாயம் பொறுப்பேற்றுக் கொள்வார் என தெரிகிறது. அதே போல் ஏனாம் தொகுதியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட்டு வென்ற சுயேட்சை வேட்பாளர் கொல்லப்பல்லி ஸ்ரீநிவாஸ் அசோக் தனது ஆதரவை பாஜகவிற்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.