இந்தியா

புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் தள்ளுபடி - முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் தள்ளுபடி - முதல்வர் ரங்கசாமி

Sinekadhara

புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருக்கிறார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தற்போது தாக்கல் செய்திருக்கிறார். இதில் முக்கிய அம்சமாக விவசாயிகள் பெற்றுள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருக்கிறார். அதேபோல் பெட்ரோல் மீதான ’வாட்’ வரி 3%, அதாவது லிட்டருக்கு ரூ.2.43 காசு குறைக்கப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் பட்டியலின பிரிவு மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்றும், பட்டியலின பிரிவு பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். மேலும், ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகத்தில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.