இந்தியா

“பிரதமருடன் விவாதிக்கத் தயார்” - உள்ளாட்சி தேர்தல் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

“பிரதமருடன் விவாதிக்கத் தயார்” - உள்ளாட்சி தேர்தல் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

Sinekadhara

புதுச்சேரியில் தொகுதி வரையறைப் பணிகள் நிறைவடையவில்லை என்பதால், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என முதலமைச்சர் நாராயணசாமி விளக்கமளித்துள்ளார்.

நீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் ஏன் நடத்தப்படவில்லை என பிரதமர் நரேந்திர மோடி வினவியுள்ளார். இதுகுறித்து புதிய தலைமுறையிடம் தொலைபேசி வாயிலாக நாராயணசாமி விளக்கமளித்தார். அப்போது, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்த ரங்கசாமி முதலமைச்சராக இருந்தபோதே, உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் தேர்தல் அதிகாரி நியமனத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தலையீடு இருப்பதால், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாக நாராயணசாமி விளக்கமளித்தார். புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாதது குறித்து பிரதமருடன் விவாதிக்கத் தயாராக உள்ளதாகவும் முதல்வர் நாராயணசாமி கூறினார்.

முன்னதாக, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது ஏன் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் புதுச்சேரியில் ஆட்சியில் இருப்பவர்கள்தான் ஜனநாயகம் குறித்து போதிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/w-jOPMZAkmU" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>