இந்தியா

'சந்தேகமா?.. வீட்டுக்கு வா..' - மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஐஐடி பேராசிரியர்

'சந்தேகமா?.. வீட்டுக்கு வா..' - மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஐஐடி பேராசிரியர்

EllusamyKarthik

ஐஐடி மெட்ராஸில் முனைவர் பட்ட  ஆய்வு மேற்கொண்டு வந்த மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக சீண்டியமைக்காக அந்த கல்விக்கூடத்தின் பேராசிரியர், துணை பேராசிரியராக பதவி மாற்றம் செய்யப்பட்டார். ஐஐடி மெட்ராஸின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான உள் புகார் குழு பேராசிரியர் மீது இந்த  நடவடிக்கையை எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஈடுபட்ட பேராசிரியர் சிவில் இன்ஜினியரிங் துறையை சார்ந்த மாதவ குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பாதிக்கப்பட்ட மாணவி முறைப்படி கொடுத்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கையை பேராசிரியை ஹேமா மூர்த்தி தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய குழு எடுத்துள்ளது. “இரு தரப்பிலும் விசாரித்ததில் மாணவியிடம் பேராசிரியர் மாதவ குமார் அத்து மீறியது தெரிந்தது. மேலும் அவர் 2 ஆண்டுகளுக்கு முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு பாடம் எடுக்கவும், 5 ஆண்டுகளுக்கு மாணவர்களுக்கு பாடம் எடுக்கவும் வேண்டாம் என பரிந்துரைத்துள்ளோம். மேலும் அவர் POSH பயிற்சியை மேற்கொள்ளவும் நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்” என அந்த குழு தெரிவித்துள்ளது. 

கொரோனா பொதுமுடக்க சமயத்தில் அந்த மாணவியை பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு வீட்டுக்கு வருமாறும், தனக்கு சமைத்து கொடுக்கும் படியும் மாதவ குமார் நிர்பந்தித்ததும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. படிப்பிற்காக அவரது சீண்டலை பொருத்துக்  கொண்டிருந்த மாணவி இப்போது புகார்  கொடுத்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.