காங்கிரஸ் கட்சியின் உத்திரப்பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதிக்கு பிரியங்கா காந்தி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதுவரை தீவர அரசியலில் ஈடுபாடத இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் பதவி பெற்றிருப்பது குறிப்படதக்கது. இது அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அனைவரும் எதிர்பார்கின்றனர். மேலும் தற்போது நடைபெறயிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ள கும்ப மேளாவில் பங்கேற்க உள்ளனர். அங்கு அவர்கள் கங்கையும் யமுனையும் சந்திக்கும் இடத்தில் நீராட உள்ளனர். அன்றைய தினம் ‘மவுனி அமவாசை’மற்றும் இரண்டாவது‘ஷாஹி ஸ்நான்’ என்பதால் இதனை தேர்ந்தெடுத்துள்ளனர். அன்று இயலாவிட்டால் இவர்கள் இருவரும் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி ‘பசந்த பஞ்சமி’ அன்று நீராடுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் பிப்ரவரி 4ஆம் தேதி இருவரும் கூட்டாக லக்னோவில் செய்தியாளர்களை சந்திக்கவும் உள்ளனர். ஏற்கனவே, கடந்த 2001 ஆண்டு நடந்த கும்பமேளாவில் சோனியா காந்தி கலந்துகொண்டு நீராடியிருந்தார்.
இதுபோன்று தேர்தல் நேரங்களில் கோயிலுக்கு செல்வதை ராகுல் காந்தி வழக்கமாக வைத்துள்ளார். இதற்குமுன்பு, குஜராத், கர்நாடகா தேர்தல்களுக்கு முன் ராகுல் காந்தி கோயிகளுக்கு சென்று வழிபாடு நடத்தியிருந்தார். அந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி நல்ல வெற்றிகளை ஈட்டியது. மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் வழிபாட்டின் போது ராகுல் காந்தி தான் தத்தாத்ரேயா கோத்திரத்தில் பிறந்த, கௌவுல் பிரமாணர் என்று கூறியது நாடு முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.