இந்தியா

தனியார் பிஎப் ட்ரஸ்டுகளுக்கு கிடுக்குப்பிடி!

தனியார் பிஎப் ட்ரஸ்டுகளுக்கு கிடுக்குப்பிடி!

webteam

ஊழியர்களிடம் பிடிக்கப்படும் தொகையை வருங்கால வைப்பு நிதி ஆணையத்திற்கு அனுப்பிய 2 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரிடம் மாதந்தோறும் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிஎப் தொகை பிடிக்கப்படும். இந்த தொகை வருங்கால வைப்பு நிதி ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் ஊழியர் பணியில் இருந்து நின்ற பிறகு அல்லது தேவைப்படும்போது வழங்கப்படும். ஆனால் சில தனியார் நிறுவனங்கள் இதற்காக பிஎப் ட்ரஸ்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால், அவற்றிற்கு மட்டும் பிடிக்கும் தொகையை வருங்கால வைப்பு நிதி ஆணையத்திற்கு அனுப்புவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல பிஎப் டிரஸ்டுகள் வைப்பு நிதியை, பிஎப் கணக்குகளில் முறையாக தாக்கல் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் இணையதளம் மூலமாக பிஎப் கணக்குகளை முறையாக செலுத்தவில்லை என்பதால் 700 தனியார் பிஎப் டிரஸ்டுகளுக்கு கட்டுப்பாடு முறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊழியர்களின் பிஎப் கணக்குகளை இணையதளத்தில் தாக்கல் செய்யாமல், முறைகேடு செய்யும் நிறுவனங்களின் விலக்கு ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊழியர்களின் பிஎப் தொகையை வைப்பு நிதி ஆணையத்தில் தாக்கல் செய்த 2 நாட்களுக்குள், ஊழியர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாக தெரியப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.