மத்திய பட்ஜெட் அனைவருக்குமானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டின் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தற்காலிக நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில், விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வருமான உதவி திட்டம் 12 கோடி விவசாயிகளுக்கு பலனளிக்கும் எனவும் நடுத்தர மக்கள் இனி பலன்களை அனுபவிப்பார்கள், அவர்களுக்கு வாழ்த்துகள் எனவும் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது எனவும் இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்களில் அதிகபட்சமாக 3 கோடி விவசாயிகளே பயன்பெற்றதாகவும் வருமான உதவி திட்டத்தின்கீழ் 12 கோடி விவசாயிகள் பயன் பெறுவர் எனவும் குறிப்பிட்டார்.
பசு வளர்ப்போர், மீனவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறுவர் எனவும் ஆயுஷ்மான் பாரத், பிரதான் மந்திரி, யோஜனா திட்டஙக்ளில் அனைத்து மக்களும் நன்மை பெறுவார்கள் எனவும் மோடி தெரிவித்தார்.
ஒவ்வொரு குடிமகனும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் திட்டங்கள் இதில் உள்ளதாக குறிப்பிட்ட மோடி, அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்தார்.
சமூகத்தின் கடைகோடி குடிமகனுக்கும் இத்திட்டம் சென்றடையும் எனவும் வளர்ச்சி திட்டங்களுக்கான ட்ரெய்லர்தான் இந்த பட்ஜெட் எனவும் மோடி தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பின் மேற்கொள்ளப்படவுள்ள புதிய வளர்சிப்பாதைக்கான ட்ரெய்லர்தான் இடைக்கால பட்ஜெட் என மோடி குறிப்பிட்டார்.