இந்தியா

“இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்” - குடியரசுத் தலைவர் உரை

“இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்” - குடியரசுத் தலைவர் உரை

webteam

நல்ல செயலுக்காக போராடும் போது வன்முறையில் ஈடுபடுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டின் 71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றிய ராம்நாத் கோவிந்த், சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித்துறை என நவீன இந்தியாவின் மூன்று முக்கிய அங்கங்கள், ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளவை என்றார். அடிப்படையில் மக்கள் தான் குடியரசை வழிநடத்தி செல்கிறார்கள் என்றும், எதிர்காலத்தை முடிவு செய்வதற்கான உண்மையான அதிகாரம் மக்களிடமே இருக்கிறது என்றும் ராம்நாத் கோவிந்த் பேசினார்.

காந்தியின் உண்மை மற்றும் அஹிம்சையை தினசரி வாழ்க்கையில் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்திய குடியரசுத் தலைவர், நல்ல விஷயத்திற்காக போராடும் போது வன்முறையில் ஈடுபடுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அரசியலமைப்பு சட்டம் குடிமக்கள் அனைவருக்கும் அனைத்து உரிமைகளையும் வழங்கியிருக்கிறது என்றும், அதே சமயம் ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை பேணும் வகையில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.