இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசு தலைவர் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசு தலைவர் தரிசனம்

rajakannan

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

திருப்பதிக்கு ராம்நாத் கோவிந்த் தனது மனைவி சவிதா, மகன் பிரசாந்த் குமார் மற்றும் மகள் ஸ்வாதி ஆகியோர் உடன் நேற்று சென்றார். இன்று காலை 7 மணிக்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்ட ராம்நாத் கோவிந்த், முதலில் வராக சுவாமி கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். 

ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன், முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அவருடன் சென்றனர். இதையடுத்து ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து அங்கிருந்து புறப்பட்டார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட ராம்நாத் கோவிந்த் டெல்லி புறப்பட்டு சென்றார்.

ராம்நாத் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திருப்பதியில் தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.