இந்தியா

நாட்டிலேயே குறைவான விகிதம்... தமிழ்நாட்டில் தொடர் சரிவில் கருவுறுதல் விகிதம்!

நாட்டிலேயே குறைவான விகிதம்... தமிழ்நாட்டில் தொடர் சரிவில் கருவுறுதல் விகிதம்!

webteam

தமிழ்நாடு மற்றும் டெல்லி மாநிலங்களில் மொத்த கருவுறுதல் இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் ஆண்டுதோறும் மாதிரி பதிவு அறிக்கையை  வெளியிடுவது வழக்கம். கருவுறுதல் விகிதம், இறப்பு விகிதம் ஆகியவற்றை மாநில மற்றும் தேசிய அளவில் கணக்கிட்டு வெளியிடும் இந்த அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.

இதன்படி தமிழ்நாட்டில் மொத்த கருவுறுதல் விகிதம் 1.4 ஆக சரிந்துள்ளது. 2011 ல் மாநிலத்தின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.8 ஆக இருந்தது. இதையடுத்து தற்போது நாட்டிலேயே மிகவும் குறைவான விகிதத்தை தமிழ்நாடு கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்தில் மொத்த கருவுறுதல் விகிதம், 1.5 ஆக இருக்கிறது.

அதேபோல, நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது. மேலும் கேரளாவுக்கு அடுத்தபடியாக, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கருவுறுதல் விகிதம் குறைவால் மனிதவளத்துக்காக வருங்காலங்களில் பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களையே தமிழகம் நம்பியிருக்கவேண்டிய சூழல் ஏற்படும் என்று கருதப்படுகிறது.